என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » ரெயில் பெட்டி
நீங்கள் தேடியது "ரெயில் பெட்டி"
மகாத்மா காந்தியின் பிறந்தநாளை முன்னிட்டு அனைத்து ரெயில் பெட்டிகளிலும் தூய்மை இந்தியா சின்னத்துடன், இந்திய தேசிய கொடியை வரைய ரெயில்வே வாரியம் உத்தரவிட்டு உள்ளது. #MahatmaGandhi #IndianRailway #SwachchBharat
புதுடெல்லி:
மகாத்மா காந்தியின் 150-வது பிறந்தநாளை இந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல் நாடு முழுவதும் அனைத்து அரசு துறைகளும் கொண்டாட மத்திய அரசு அறிவுறுத்தி இருக்கிறது. இந்தியா மட்டுமன்றி வெளிநாடுகளில் உள்ள தூதரக அலுவலகங்களிலும் மகாத்மா காந்தியின் பிறந்த நாளை கொண்டாட கேட்டுக்கொள்ளப்பட்டு உள்ளது.
அதன்படி இந்திய ரெயில்வே துறை மகாத்மா காந்தியின் பிறந்தநாளை கொண்டாட இருக்கிறது. அந்த வகையில் அனைத்து ரெயில் பெட்டிகளிலும் தூய்மை இந்தியா சின்னத்துடன், இந்திய தேசிய கொடியை வரைய ரெயில்வே வாரியம் உத்தரவிட்டு உள்ளது.
மேலும் டெல்லி, மும்பை, லக்னோ, சூரத், பெங்களூரு உள்ளிட்ட 43 ரெயில் நிலையங்களில் அக்டோபர் முதல் அடுத்த 6 மாதங்களுக்கு ஒவ்வொரு தலைப்பிலும் வாசகங்கள் இடம் பெறவும், பூரி, அமிர்தசரஸ் ஹரித்துவார் உள்ளிட்ட 28 ரெயில் நிலையங்களை மிகவும் தூய்மையாக வைத்திருக்கவும் அறிவுறுத்தி உள்ளது. சுகாதாரம், அமைதி, தன்னார்வ சமூக சேவை, இன ஒற்றுமை, தீண்டாமை ஒழிப்பு, பெண்கள் முன்னேற்றம் ஆகிய தலைப்புகளில் வாசகங்கள் 43 ரெயில் நிலைங்களில் இடம் பெற இருக்கின்றன. #MahatmaGandhi #IndianRailway #SwachchBharat

நாடு முழுவதும் 30 ஆயிரம் ரெயில் பெட்டிகளுக்கு புதிய வண்ணத்திற்கு மாற்றப்படும் என்று ரெயில்வே அமைச்சகம் தெவித்துள்ளது. #Train
சென்னை:
நாடு முழுவதும் உள்ள ரெயில் பெட்டிகளின் வர்ணத்தை மாற்ற ரெயில்வே அமைச்சகம் முடிவு செய்துள்ளது. தற்போது ரெயில்களில் நீலம் வண்ணம் பூசப்பட்டு இருக்கிறது.
இதனை மாற்றி விட்டு இருண்ட பழுப்பு நிறம் மற்றும் இளம் பழுப்பு நிறம் ஆகிய 2 வண்ணங்களை பூச திட்டமிட்டுள்ளது.
முதல் கட்டமாக வடக்கு ரெயில்வேக்கு உட்பட்ட டெல்லி-பதர்கோட் எக்ஸ்பிரஸ் ரெயிலில் உள்ள 16 பெட்டிகளுக்கு புதிய வண்ணம் பூசப்படுகிறது.
இந்த புதிய வண்ணம் மாற்றும் திட்டம் அதனை தொடர்ந்து தெற்கு, மத்திய, கொங்கன் உள்ளிட்ட அனைத்து ரெயில்வேக்கும் செயல்படுத்தப்படும். 30 ஆயிரம் ரெயில் பெட்டிகளுக்கு புதிய வண்ணம் படிப்படியாக பூசப்படும்.
ராஜ்தானி, சதாப்தி, தூரந்தோ ஆகிய ரெயில்களை தவிர மற்ற அனைத்து ரெயில் பெட்டிகளும் புதிய வண்ணத்திற்கு மாற்றப்படும் என்று ரெயில்வே அமைச்சகம் தெவித்துள்ளது. #Train
×

X